“அஜித் சார் ஹாய் சொன்ன தருணம்…” அஜித்தை புகழ்ந்து தள்ளும் நடிகர், டிரெண்ட் ஆகும் pics

By


அஜித் என்றாலே அமர்க்களம்!! அஜித் என்றாலே அட்டகாசம்!! அஜித் பற்றிய செய்தி என்றாலே வைரல்!! அஜித் படம் என்றாலே மாஸ்!!

கடந்த சில ஆண்டுகளாக நடிகர் அஜித் (Ajith) ரசிகர்களின் மனங்களின் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளதோடு, அபரிமிதமான அன்பையும் பெற்று வருகிறார். அவர் குறித்த ஒவ்வொரு செய்தியும் இணையத்தில் டிரெண்டாகாமல் இருப்பதில்லை. தற்போதும் அவரைப் பற்றிய ஒரு செய்தி வைரல் ஆகி வருகிறது.

2008 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் ராஜுசுந்தரத்தின் இயக்கத்தில் ‘ஏகன்’ படம் வெளியானது. அந்த படத்தில் அஜித்துடன் கல்லூரி மாணவராக நடித்த நடிகர் நவ்தீப் பலரது கவனத்தை ஈர்த்தார். அப்போதே நடிகர் நவ்தீப் அஜித்துக்கு பெரிய ரசிகராகவும் மாறினார்.

தற்போது, பல ஆண்டுகளுக்கு பிறகு, அஜித்துடன் இருக்கும் படங்களை நடிகர் நவ்தீப் வெளியிட்டுள்ளார். அவை ட்விட்டர் ட்ரெண்டிங்கில் சக்கை போடு போட்டு வைரலாகி (Viral) வருகின்றன. 

ALSO READ: வலிமை – அண்ணாத்த ஒரே நாளில் ரிலீஸ்? உண்மை நிலவரம் இதோ!

சமீபத்தில் நடிகர் அஜித் ஹைதராபாத்தில் பைக் ரேஸ் நிகழ்வில் கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் நடிகர் நவ்தீப்பும் கலந்துகொண்டார். அஜித்துடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துகொண்ட நவ்தீப், “அஜித் சார் அன்பால் நிறைந்தவர். அவர் ‘ஹாய்’ சொன்ன விதம், நீண்ட நாட்களாக தெரிந்த ஒருவரை சந்தித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. அவருடைய எளிமையையும் பண்பையும் பார்ப்பதை ஒரு அனுபவமாக உணர்கிறேன். அஜித் சார் உண்மையிலேயே அற்புதமான மனிதர்!! ” என்று பதிவிட்டுள்ளார். 

அஜித் நவ்தீப்புடனும் மற்ற பைக் ரேஸ் வீரர்களோடு எடுத்துக்கொண்ட படங்களும் வைரல் ஆகி வருகின்றன.

நேர்கொண்ட பார்வை பட வெற்றிக்குப் பிறகு எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ (Valimai) படத்தில் நடித்து வருகிறார். சமீப காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக இது உள்ளது. இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

படத்தின் இறுதி கட்ட சண்டைக் காட்சிகள் சமீபத்தில் ரஷ்யாவில் படமாக்கப்பட்டன. இதற்காக ‘வலிமை’ படக்குழுவினர் ரஷ்யா சென்று படப்பிடிப்பை முடித்தனர். 

ALSO READ: ‘தல-62’வில் இந்த தயாரிப்பாளருடன் இணைகிறாரா அஜித்? எப்போது படப்பிடிப்பு?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Leave a Comment