அருவருப்பான செயல்களில் ரஜினி ரசிகர்கள் ஈடுபட வேண்டாம்: தலைமை மன்றம் கண்டனம்

By


சென்னை: கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 10) சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு சூப்பரான நாளாக இருந்தது. அன்று ஒரே நானில் அண்ணாத்த படத்தின் மூன்று போஸ்டர்கள், அதாவது ஃபர்ஸ்ட் லுக், படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் படத்தின் செகண்ட் லுக் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப மகிழ்ச்சி, அதிர்ச்சி இரண்டியும் சேர்த்தே  அளித்தது. ஆனால் அன்று நடந்த ஒரு சம்பவம், ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களுக்கும், சூப்பர் ஸ்டாருக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைத்தது.

அண்ணாத்த படத்தின் போஸ்டருக்கு ஆட்டை பலி கொடுத்து, அதன் ரத்தத்தை போஸ்டர் மேல் ஊற்றி அபிசேகம் செய்துள்ளனர். இந்த வீடியோ வெளியாகி வைரலானதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களில் பலர் இந்த சம்பவத்திற்கு கண்டனத்தைத் தெரிவித்து பலர் பதிவிட்டு வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், நாடே போற்றும் ரஜினிகாந்த், இந்த சம்பவம் குறித்து எதுவும் கூறாமல், எப்பொழுதும் போல அமைதி காத்ததனால், அவரிடம் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். இதுபோன்ற சம்பவத்தை கண்டித்து ஏன் அறிக்கையோ அல்லது தனது ரசிகர்களுக்கு அறிவுரையோ வழங்கவில்லை. தன் படம் வெற்றி பெற்றால் மட்டும் போதும் என நினைக்கிறாரா? அல்லது தனது படத்திற்கு புரோமோஷன் கிடைக்கிறது என அமைதி காக்கிறாரா? என பதிவிட்டு பல கேள்விகள் ரஜினியை நோக்கி வீசப்பட்டது.

Zee Hindustan Tamil செய்தி ஊடகம் மூலமாகவும், இந்த சம்பவத்தை கண்டித்து தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் பேசுவாரா அல்லது அறிக்கையாவது விடுவாரா? எனக் கேட்டிருந்தோம்.

ALSO READ | முறுக்க, கொதிக்க, தெறிக்க வெளியானது அண்ணாத்த மோஷன் போஸ்டர்

சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்கு பிறகு, தற்போது அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில், இந்த சம்பவத்தை கண்டித்து அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், ‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் மீது ஒரு சிலர் ஆடு வெட்டி ரத்த அபிசேகம் செய்வது போன்ற வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது மிகவும் வருந்தத்தக்கது மற்றும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அருவருப்பான இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார்.

Rajinikanth first look

தமிழ்நாட்டை பொறுத்த வரை உச்ச நடிகர்களின் படங்கள் குறித்து அறிவிப்பு, படத்தின் தலைப்பு, போஸ்டர்கள், டீசர், ட்ரைலர் மற்றும் படம் திரைக்கு வரும் நாள் என எந்த அறிவிப்பும் வெளியானாலும், அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் பெரிய பெரிய கட்-அவுட் வைத்து, அதற்கு மாலை போட்டு, கற்பூரம் காட்டி, பால் அபிசேகம் என தங்கள் நடிகரை கொண்டாடுவார்கள். ஆனால் அண்ணாத்த போஸ்டருக்கு ரஜினி ரசிகர்கள் ரத்தத்தால் அபிசேகம் செய்தது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

அருவருப்பான இதுபோன்ற செயல்களில் ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லை, எந்த நடிகரின் ரசிகர்களும் ஈடுபடமாட்டார்கள் என் நம்புவோம். 

ALSO READ | அண்ணாத்த படத்தின் மாஸ் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள அண்ணாத்த (Annaatthe) படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாவும், அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Leave a Comment