அவனுக்கு கரையும் கிடையாது, தடையும் கிடையாது! வெளியானது அண்ணாத்த டீஸர்!

By


தர்பார் படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என நடிகர் பட்டாளமே நடிக்கும் திரைப்படம் அண்ணாத்த.  இப்படத்தை பற்றிய அறிவிப்பு வெளி வந்ததிலிருந்தே இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது.  கமர்சியல் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ரஜினி கிராமத்து கதைகளில் கலக்கும் சிவாவுடன் கூட்டணி வைத்ததால் இந்த எதிர்பார்ப்பு எழுந்தது.

தீபாவளி வெளியீடு என்று அறிவித்திருந்த இந்த படம், பின்பு வேறு தேதிக்கு மாற்றலாமா என்ற பேச்சு எழுந்தது.  கடைசியில் தீபாவளி தினத்தில் வெளியாவது உறுதி என்று படக்குழு அறிவித்தது.  கடந்த வாரத்தில் இமான் இசையில் அண்ணாத்த திரைப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதனையடுத்து இன்று மாலை 6 மணிக்கு அண்ணாத்த படத்தின் டீஸர் வெளியானது.  கிராமத்தானை குணமாதான பாத்து இருக்க, கோவப்பட்டு பாத்தது இல்லயே என்று தொடங்கும் இந்த டீசர் முழுக்க முழுக்க ராஜியை மையப்படுத்தியே உள்ளது.  ‘காட்டாறு’ அவனுக்கு கரையும் கெடையாது, தடையும் கெடையாது என்ற மாஸான வசனத்துடன் அதிரடி டீசராக வெளிவந்துள்ளது அண்ணாத்த. 

இத்திரைப்படம் ஒரு பேமிலி எண்டர்டெயினர் என்று தகவல்கள் வெளிவந்தாலும் படக்குழு இதனை ஆக்சன் திரைப்படமாகவே காட்டுகிறது.  படத்தில் உள்ள மற்ற கதாபாத்திரங்களை காட்டாமல் சஸ்பென்ஸ் வைத்துள்ளார் இயக்குனர் சிவா.  டீசரின் இறுதியில் ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு ரஜினியின் அந்த சிரிப்பை பார்க்கவே ரசிகர்கள் பலமுறை பார்ப்பார்கள்.  பல நாட்கள் காத்திருப்புக்கு ரஜினி ரசிகர்களுக்கு ஒரு விருந்தாகவே அமைத்துள்ளது இந்த டீஸர்.

 

ALSO READ இணையத்தில் வைரலாகும் வலிமை அஜித் புகைப்படங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Leave a Comment