இணையத்தில் வைரலாக்கும் வடிவேலுவின் பிறந்தநாள் கொண்டாட போட்டோஸ்

By


தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கி வருபவர் நடிகர் வடிவேலு. இவருக்கு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இவரை அவரது ரசிகர்கள் வைகை புயல் என்றும் நகைச்சுவை மன்னன் என்று அழைப்பார்கள். 

கடந்த சில வருடங்களாக  அரசியல் நிலைபாடு, இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க வடிவேலு அவர்கள் மறுத்ததால் இயக்குநர் ஷங்கருடனான மோதல்போக்கு, கால்சீட் பிரச்சனை போன்றவற்றின் பேரின் வடிவேலுவை (Vadivelu) புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக படங்களில் வடிவேலு நடிக்கவில்லை. 

Also Read | மக்களை சந்தோஷப்படுத்திவிட்டு தான் இந்த உசுரு போகும்: வடிவேலு பளிச்

சமீபத்தில் அவர் மீதான தடை நீக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார் வடிவேலு. அதன்படி சுராஜ் இயக்கும் படத்தில் முதலில் நடிக்க உள்ளார் வடிவேலு, இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் இது தொடர்பாக அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த வடிவேலு, தனக்கு எண்ட் கார்டு கிடையாது என்றும்  உற்சாகமாக பதிலளித்தார்.

இந்நிலையில், நேற்று வடிவேலு பிறந்தநாளை யொட்டி சமூக வலைதளங்களில் வடிவேலுவின் நிகைச்சுவை காட்சிகள், மீம்ஸ் ஆகியவை மூலம் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

நடிகர் வடிவேலு தனது 62-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி இயக்குனர் சுராஜ், நடிகர் வடிவேலுவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். இந்த கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படத்தை நடிகர் வடிவேலு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

 

 

Also Read | துபாய் காமெடி பாணியில் வடிவேலுக்கு வாழ்த்துக்கள் சொன்ன சேரன்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Leave a Comment