தேசிய விருது வென்ற இயக்குனருடன் கூட்டணி சேரும் விஜய் சேதுபதி; விரைவில் படப்பிடிப்பு

By


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் தற்போது அனபெல் சேதுபதி, கடைசி விவசாயி, மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், விடுதலை, காந்தி டாக்ஸ், விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன. 

இதற்கிடையில் கடந்த வாரம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) நடித்த ’லாபம்’ (Laabam) மற்றும் ’துக்ளக் தர்பார்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியானது. அதே சமயம் இந்த வாரம் அனபெல்லா சேதுபதி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இத்துடன் அவர் கைவசம் கடைசி விவசாயி, மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், விடுதலை, காந்தி டாக்ஸ், விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | துக்ளக் தர்பாரில் யார் வில்லன்? – விமர்சனம்

இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் மேலும் ஒரு படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் மணிகண்டன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ’காக்கா முட்டை’ மற்றும் விஜய் சேதுபதி நடித்த ’ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களுக்கு தேசிய விருது பெற்றுள்ளார். தற்போது 3-வது முறையாக அவருடன் கூட்டணி அமைக்க உள்ளார். 

மேலும் ஆண்டவன் கட்டளைபடத்திற்கு பின்னர் மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணையும் மணிகண்டன், இந்த படத்தை ஒரு அதிரடி கிராமப்புற ஆக்ஷன் படமாக உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

 

ALSO READ | மகளுடன் நடிக்கமாட்டேன்! விஜய் சேதுபதி அதிரடி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Leave a Comment