Survivor Update: இன்றைய ப்ரோமோ; முதல் போட்டியே இவ்ளோ கடினமா

By


Survivor Update: சர்வைவர் தமிழ் நேற்று முதல் Zee Tamil ஒளிபரப்பை தொடங்கி இருக்கிறது. ஆப்ரிக்காவின் தீவு ஒன்றில் நடந்து வரும் இந்த ஷோவில் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்று வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியை நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வருகிறார். 

போட்டியாளர்களின் விவரம்:
சர்வைவர் (Survivor) ஷோவில் பெசன்ட் ரவி, லக்கி நாராயண், அம்ஜத் கான், விஜே பார்வதி, லக்ஷ்மி ப்ரியா, லேடி கேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, காயத்ரி ரெட்டி, உமாபதி ராமையா, விக்ராந்த், விஜயலக்ஷ்மி, ஐஸ்வர்யா, சரண், நந்தா, ராம். சி, இந்திரஜா ரோபோ ஷங்கர் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டிருக்கின்றனர்.

ALSO READ | Bigg Boss Tamil Season 5 Latest Updates: பிக்பாஸ் இல் சூப்பர் சிங்கர் பிரியங்கா

நேற்றைய முதல் எபிசோடில் தொகுப்பாளர் அர்ஜுன் தீவில் இறங்குவது போல காட்டப்பட்டு இருந்தது. போட்டியாளர்கள் படகில் அங்கு சென்று இறங்குகின்றனர். மேலும் போட்டியாளர்களிடம் இருந்து செல்போன் உட்பட அனைத்து பொருட்களும் வாங்கப்பட்டது. அத்துடன் அவர்கள் பையில் இரண்டு உடைகள் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் முதல் நாளிலேயே போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது முதல் போட்டி என்ன என்பது தற்போது வெளியாகி இருக்கும் இன்றைய எபிசொடுக்கான ப்ரோமோவில் வெளியாகி உள்ளது. அதில் இரண்டு அணிகளும் கடலுக்கு நடுவில் நிறுத்தப்பட்டு இருக்கும் படகிற்கு சென்று அங்கு இருக்கும் காய்கறிகளை கொண்டு வர வேண்டும். எந்த அணி ஜெயிக்கும் என்பதை இன்றைய எபிசோடில் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். ப்ரோமோ வீடியோ இதோ..

 

ALSO READ | Bigg Boss Tamil Season 5: இரண்டாவது புரொமோ வீடியோ வெளியானது; கசிந்தது முக்கிய தகவல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Leave a Comment