ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு இல்லையா? -மத்திய அரசு மீது பிரியங்கா காந்தி பாய்ச்சல் || Priyanka Gandhi Slams Centre Over ‘No Oxygen Deaths’ Statement

Byபெருந்தொற்று காலத்தில் ஆக்சிஜன் ஏற்றுமதி 700 சதவீதம் உயர்த்தபட்டதன் விளைவாக உயிரிழப்பு அதிகரித்ததாக பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.

புதுடெல்லி:

கொரோனா இரண்டாம் அலை பாதிப்பின்போது நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார், மாநிலங்களவையில் கூறினார்.

இது முற்றிலும் தவறான தகவல் என்றும், ஆக்சிஜன் பற்றாக்குறைக் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மக்கள் பலியானதாகவும் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறினார்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவரும் உயிரிழக்கவில்லை என்று கூறிய மத்திய அரசை, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் விமர்சித்துள்ளார்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என மத்திய அரசு கூறுகிறது. ஆனால் பெருந்தொற்று காலத்தில் ஆக்சிஜன் ஏற்றுமதி 700 சதவீதம் உயர்த்தபட்டதன் விளைவாக உயிரிழப்பு அதிகரித்ததாக பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.

‘மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ஆலைகளை ஏற்படுத்த எவ்வித முன்னெடுப்பும் மேற்கொள்ளவில்லை. ஆக்சிஜனை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல டேங்கர்களை ஏற்பாடு செய்யப்படவில்லை’ என்றும் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார்.

ஆக்சிஜன் பற்றாக்குறை விவகாரத்தில் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவின் பவார் பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்துகிறார் என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment