ஆந்திராவில் போலி முட்டை விற்பனை- பொதுமக்கள் அதிர்ச்சி || Tamil News Fake egg sale in AP public shock

Byமுட்டையை எடுத்து உடைத்து பார்த்தால், அதில் ஒன்றுமே இல்லை. வெறும் பிளாஸ்டிக் முட்டை போல் இருந்துள்ளது.

திருப்பதி:

நெல்லூர் மாவட்டம், வரிகுண்டபாடு மண்டலத்தில் உள்ள கிராம பகுதிகளில் நேற்று முட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு மினி வேன் ஊருக்குள் வந்தது.

அந்த வேனில் முட்டை டிரேக்களை ஏற்றிக்கொண்டு வந்த வியாபாரி, ஊர் முழுக்க சுற்றி, 30 முட்டைகள் ரூ.130-க்கு விற்பனை செய்கிறேன் என்றார். இதனால் அந்த ஊரில் இருந்த பலர் முட்டைகளை டிரே கணக்கில் வாங்கினர்.

ஒரே மணி நேரத்தில் அனைத்து முட்டைகளையும் விற்றுவிட்டு அந்த முட்டை வியாபாரி அந்த ஊரை விட்டு சென்றுவிட்டார்.

முட்டையை வாங்கியவர்களில் சிலர் அவரவர் வீடுகளில் முட்டையை சமைக்க தொடங்கினர். சுமார் ஒரு மணி நேரம் ஆகியும் முட்டை வேகாததால், சந்தேகம் அடைந்தனர்.

பின்னர் அந்த முட்டையை எடுத்து உடைத்து பார்த்தால், அதில் ஒன்றுமே இல்லை. வெறும் பிளாஸ்டிக் முட்டை போல் இருந்துள்ளது. சிலர் ஆம்லெட் போடவும் முயற்சித்துள்ளனர்.

ஆனால் முட்டை உடையவில்லை. இதனால், அனைவரும் ஒருசேர முட்டை வியாபாரியால் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தது அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை தொடர்ந்து வரிகுண்டபாடு போலீஸ் நிலையத்தில் அந்த முட்டை வியாபாரி மீது கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, முட்டை வியாபாரியை தேடி வருகின்றனர்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment