இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 15,823 பேருக்கு தொற்று || Tamil News India reports 15,823 new COVID19 cases

Byகொரோனா பாதிப்பு காரணமாக கேரளாவில் 106, மகாராஷ்டிராவில் 43 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 226 பேர் இறந்துள்ளளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,51,189 ஆக அதிகரித்துள்ளது.

புதுடெல்லி:

கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,823 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் கீழ் உள்ளது.

நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 7,823, மகாராஷ்டிராவில் 2,069, தமிழ்நாட்டில் 1,289, மிசோரத்தில் 1,224 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 1ஆயிரத்து 743 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பு காரணமாக கேரளாவில் 106, மகாராஷ்டிராவில் 43 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 226 பேர் இறந்துள்ளளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,51,189 ஆக அதிகரித்துள்ளது.

நோயின் பிடியில் இருந்து மேலும் 22,844 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 33 லட்சத்து 42 ஆயிரத்து 901 ஆக உயர்ந்தது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 2,07,653 ஆக சரிந்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 7,247 குறைவு ஆகும்.

நாடு முழுவதும் நேற்று 50,63,845 டோஸ்களும், இதுவரை செலுத்தப்பட்ட டோஸ்களின் எண்ணிக்கை 96.43 கோடியாகவும் உயர்ந்தது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி நேற்று 13,25,399 மாதிரிகளும், இதுவரை 58.63 கோடி மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment