இந்தியாவில் புதிதாக 27,254 பேருக்கு கொரோனா தொற்று || Tamil News India reports 27254 new COVID 19 cases

By



கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,24,47,032 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 37,687 பேர் குணமடைந்துள்ளனர்.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,32,64,175 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 219 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,42,874 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,24,47,032 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 37,687 பேர் குணமடைந்துள்ளனர்.
 
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,74,269 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 74,38,37,643 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


https://www.youtube.com/watch?v=videoseries





Source link

Leave a Comment