இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி செலுத்திய இனிப்பான செய்தி முக்கியமான இடங்களில் அறிவிக்கப்படுகிறது || India completes 100 crore vaccinations Union Health Minister Mansukh Mandaviya Announcements will be made at seaports

Byதுறைமுகங்கள், ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் இந்தியா 100 கோடி தடுப்பூசி செலுத்திய இனிப்பான செய்தி அறிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி துரிதமான நடந்து வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில்  96,82,20,997 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 35,66,347 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியா 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை எட்ட இன்னும் 3.18 கோடி மட்டுமே செலுத்த வேண்டியுள்ளது. இந்த இலக்கை எட்டியதும் துறைமுகங்கள், ரெயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மெட்ரோ ரெயில் நிலையங்கள், விமான நிலையங்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment