இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு -5 பேர் உயிரிழப்பு || Five killed in gun firing by militants at Manipur’s Kangpokpi

Byமணிப்பூரில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.

இம்பால்:

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டம் ஹிங்கொஜங் கிராமத்தில் கடந்த 10-ம் தேதி குகி பயங்கரவாதிகள் 4 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுகொல்லப்பட்டனர்.  இவர்களின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி கங்மம் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. 

அப்போது, அங்கு வந்த பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில், கிராமத்தினர் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தூப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment