உத்தரபிரதேசத்தில் டெங்கு பலி எண்ணிக்கை 70 ஆக உயர்வு || Tamil News Dengue fever death toll rises to 70 in UP

Byபிரோஷாபாத் மாவட்டத்தில் தற்போது சுமார் 12 ஆயிரம் பேர் ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரோஷாபாத்:

உத்தரபிரதேச மாநிலத்தில் பிரோஷாபாத் மாவட்டம் டெங்கு காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய குழுவினர் கடந்த வாரம் ஆய்வு செய்து, டெங்குவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தினர். மாநில அரசும் டெங்கு பரவலுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பிரோஷாபாத் மாவட்டத்தில் வீடு வீடாக ஆய்வு செய்து, தண்ணீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வந்தபாடில்லை. பிரோஷாபாத் மாவட்டத்தில் டெங்கு மற்றும் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

ஆனால் 91 குழந்தைகள் உள்பட 123 பேர் டெங்குவால் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல் குறிப்பிடுகிறது.

பிரோஷாபாத் மாவட்டத்தில் தற்போது சுமார் 12 ஆயிரம் பேர் ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment