உ.பி.யில் பாலத்தில் இருந்து விழுந்த பேருந்து: ஒருவர் பலி- 3 பேர் படுகாயம் || Many people feared injured after a bus falls from Bhatia Modh flyover

Byஉத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் பாலத்தில் இருந்து கீழே விழுந்து பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

பேருந்து விபத்து

நொய்டாவில் இருந்து காசியாபாத்துக்கு எட்டு பயணிகளுடன் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து பாடியா போத் என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் வரும்போது திடீரென டயர் வெடித்தது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. அப்போது பாலத்திற்கு கீழ் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது பேருந்து விழுந்தது.

பேருந்து விபத்து

இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்த 3 பேரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, விபத்து குறித்து விசாரித்து வரும் நிலையில்,  மீட்பு குழு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment