எதிர்கால அலைகளால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பா? || Tamil News Coronavirus future waves effects on children

Byபெரியவர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாலும், குழந்தைகளுக்கு தடுப்பூசி இன்னும் அங்கீகரிக்கப்படாததாலும் அவர்களுக்கு பாதிக்கக்கூடும் என ஊகிக்கின்றனர்.

புதுடெல்லி:

குழந்தைகளுக்கு கொரோனாவின் 3-வது அலையால் அதிக பாதிப்பு வரலாம் என ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இது குறித்து புதுடெல்லி லேடி ஹார்டிங்கே மருத்துவ கல்லூரி குழந்தைகள் மருத்துவத்துறை இயக்குனர் பிரவீன் குமார் கூறியதாவது:-

அடுத்த சில மாதங்களில் பெரியவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்பதால் எதிர்கால அலைகள் குழந்தைகளை அதிகம் பாதிக்கக்கூடும் என ஊகிக்கின்றனர். கொரோனா வைரஸ் புதியது. இது அதிகமாக உருமாறுகிற தன்மையை கொண்டுள்ளது. எதிர்கால அலைகள் குழந்தைகளை அதிகம் பாதிக்குமா அல்லது இன்னும் அதிக தீவிரத்துடன் இருக்குமா என்பதெல்லாம் ஊகம்தான்.

பெரியவர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாலும், குழந்தைகளுக்கு தடுப்பூசி இன்னும் அங்கீகரிக்கப்படாததாலும் அவர்களுக்கு பாதிக்கக்கூடும் என ஊகிக்கின்றனர். கொரோனா வைரஸ் எதிர்காலத்தில் எவ்வாறு நடந்து கொள்ளும் என்றோ, எதிர்காலத்தில் குழந்தைகளை பாதிக்கும் என்றோ எங்களுக்குத் தெரியாது. நாம் நமது குழந்தைகளை தொற்று நோயில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

கொரோனா வைரசுக்கு எதிராக இயற்கையான நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாததால் அனைத்து வயது பிரிவினரையும் தாக்குகிறது. பாதிக்கப்பட்டவர்களில் 12 சதவீதத்துக்கு மேல் 20 வயதினருக்கு குறைவான நோயாளிகள் ஆவார்கள்.

இதுவரையில் குழந்தைகளின் இறப்பு விகிதம், பெரியவர்களுடன் ஒப்பிடுகிறபோது குறைவாகவே உள்ளது. இணை நோய் உள்ள குழந்தைகளில்தான் மரணத்தை பார்க்க முடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment