எதிர்க்கட்சிகள் தொடர் அமளி- இரு அவைகளும் ஒத்திவைப்பு || Tamil News Rajya Sabha has been adjourned soon after it began till 12 noon amid uproar by the Opposition

Byபெகாசஸ் உளவு விவகாரம், பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் நேற்று கூட்டம் தொடங்கியது.

புதுடெல்லி:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை நேற்று தொடங்கியது.  ஆகஸ்ட் 13ந் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தொடர் இன்று 2வது நாளாக கூடியது.  எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் பிற்பகல் வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

பெகாசஸ் உளவு விவகாரம், பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் நேற்று கூட்டம் தொடங்கியது. முதலே இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இரு அவைகளும் நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று காலை முதலே எதிர்க்கட்சிகள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டதால் அவையை பிற்பகல் 2 மணிவரை தலைவர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.

அதேபோல, மாநிலங்களவையிலும் அமளி ஏற்பட்டதால் பிற்பகல் 12 மணிவரை அவையை ஒத்திவைத்தனர்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment