கடனுக்கு விற்ற லாட்டரி சீட்டுக்கு ரூ.6 கோடி பரிசு: வாக்கு மாறாமல் ஒப்படைத்த பெண் வியாபாரி || Rs 6 crore prize for lottery ticket sold on debt

Byலாட்டரி வியாபாரி ஸ்மிஜா தன்னிடம் மீதம் இருந்த சீட்டுகளை தனது நிரந்தர வாடிக்கையாளர்களுக்கு கடனுக்கு விற்பனை செய்தார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொச்சியை அடுத்த சுனங்கம் வேலியை சேர்ந்தவர் ஸ்மிஜா மோகன். இவர் அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் கேரள அரசின் சம்மர் பம்பர் லாட்டரி சீட்டு விற்பனைக்கு வந்தது.

இந்த நிலையில், குலுக்கல் நடைபெற்ற அன்று பம்பர் லாட்டரி சீட்டுகள் சில மீதம் இருந்தது. அந்த சீட்டுகளை தனது நிரந்தர வாடிக்கையாளர்களுக்கு கடனுக்கு ஸ்மிஜா விற்பனை செய்தார். அதில் ஒரு சீட்டை கீழ்மாடு என்ற இடத்தை சேர்ந்த சந்திரன் என்பவரை போனில் தொடர்பு கொண்டு கடனுக்கு அந்த சீட்டை விற்றார். அதற்கு அத்தாட்சியாக அந்த சீட்டை செல்போன் மூலம் படம் பிடித்து வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பினார்.

இந்த நிலையில் ஸ்மிஜா கடனாக சந்திரனுக்கு விற்ற லாட்டரி சீட்டுக்கு ரூ.6 கோடி பம்பர் பரிசு கிடைத்தது. அதைத்தொடர்ந்து அந்த சீட்டை எடுத்துக்கொண்டு நேராக சந்திரன் வீட்டிற்கு சென்ற ஸ்மிஜா ரூ.6 கோடி பரிசு விழுந்த சீட்டை சந்திரனிடம் ஒப்படைத்தார். பின்னர் அந்த லாட்டரி சீட்டுக்கான பணம் 200-ஐ பெற்று கொண்டார். பரிசு விழுந்த சீட்டை வாக்கு மாறாமல் கொடுத்த ஸ்மிஜாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment