Tuesday, March 9, 2021
Home India காஷ்மீர் பள்ளத்தாக்கில் 11 மாதத்துக்குப் பிறகு ரெயில் சேவைகள் மீண்டும் தொடங்கின || Tamil News...

காஷ்மீர் பள்ளத்தாக்கில் 11 மாதத்துக்குப் பிறகு ரெயில் சேவைகள் மீண்டும் தொடங்கின || Tamil News Train Services Resume In Kashmir Valley After 11 Months



காஷ்மீர் பள்ளத்தாக்கில் பதினொரு மாதங்களுக்குப் பிறகு ரெயில் சேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன.

ஸ்ரீநகர்:

கொரோனா தொற்று காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் ரெயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், பதினொரு மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் தொடங்கி உள்ளன. காஷ்மீரின் ரெயில் சேவை இயக்கம், எளிமையை மேம்படுத்துவதோடு சுற்றுலாத் துறைக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்று மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

ரெயில்வே துறையானது காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு மீ்ண்டும் ரெயில் சேவையை 11 மாதங்களுக்கு பிறகு தொடங்கி உள்ளது. பனிகல்-பாரமுல்லா இடையே ஆரம்ப கட்டமாக ரெயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியும், சுற்றுலாத்துறைக்கு ஊக்கமும் அளிக்கக் கூடியதாகும். கொரோனா பாதிப்பு தொடங்கிய காலத்தில் எப்போது முதல் ரெயில் சேவையை தொடங்குவது என்பதற்கு உறுதியான தேதி எதையும் நிர்ணயிக்க முடியாத சூழல் நிலவியது. இப்போது அடுத்தடுத்த கட்டமாக ரெயில் சேவை அதிகரிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

ஏற்கனவே 65 சதவீத ரெயில் சேவை இயங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் 250 ரெயில்கள் ஜனவரி மாதத்தில் மட்டும் கூடுதலாக இயக்கப்பட்டு உள்ளன. இனி மேலும் ரெயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். தற்போது அனைத்தும் சிறப்பு ரெயில்களாக, முன்பதிவு முறையில் இயக்கப்படுகின்றன. வழக்கமான அனைத்து ரெயில் சேவைகளுக்கான தடை கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25-ந் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவித்தார்.


https://www.youtube.com/watch?v=videoseries





Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

விளையாட்டாய் சில கதைகள்: இந்திய அணியின் இளம் கீப்பர்

Published : 09 Mar 2021 03:11 am Updated : 09 Mar 2021 06:14 am   Published : 09 Mar...

COVID Cases: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் புதிய கொரோனா வைரஸ் தொற்று வழக்குகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக 18,000 க்கு மேல் பதிவாகியுள்ளன. மொத்த கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை 1,12,29,398 ஆக அதிகரித்துள்ளதாக திங்களன்று...

மேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்

மேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...

Recent Comments