குஜராத்தில் முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் || Night curfew in Gujarat will be from 11 pm to 6 am in 8 major cities

Byகொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சற்று அதிகரிக்க தொடங்கியதால் முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை உருவாகி விடக்கூடாது என்பதில் மத்திய அரசும், மாநில அரசுகளும் கவனம் செலுத்தி வருகின்றன. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணியை முடுக்கிவிட்டு வருகின்றன. என்றாலும் பொதுமக்களின் அஜாக்கிரதை, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதது, அதிக அளவில் விழாக்கள் போன்றவற்றால் முக்கிய நகரங்களில் கொரோனா தொற்று சற்று அதிரிக்க தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் குஜராத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பை தடுக்க வதோதரா, காந்திநகர், சூரத், ராஜ்கோட் போன்ற முக்கிய நகரங்களில் நாளை முதல் செப்டம்பர் 25-ந்தேதி வரை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என குஜராத் அரசு அறிவித்துள்ளது.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment