கேரளாவில் இன்று புதிதாக மேலும் 17,681 பேருக்கு கொரோனா || Kerala reported 17681 fresh COVID19 cases 25588 recoveries and 208 deaths

Byகேரளாவில் இன்று 25,588 பேர் கொரோனா தொற்றில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட போதிலும், 208 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒருநாள் அதிகரிப்பதும், ஒருநாள் குறைவதுமாக இருக்கிறது. நேற்றைய பாதிப்பு 15,058 ஆக இருந்த நிலையில் இன்று 17,681 ஆக அதிகரித்துள்ளது. 25,588 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 208 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை 1,90,750 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கேரளாவில் கொரோனா தொற்றால் மொத்தம் 22,987 பேர் உயிரிழந்துள்ளனர். 42,09,746  பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 97,070 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment