கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களின் இன்றைய கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ்… || Kerala maharashtra states covid 19 today positive cases details

Byகேரளாவில் கொரோனாவிற்கு 1,98,865 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 49,671 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 15,876 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 44,06,365 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து 25,654 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை கேரளாவில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 41,84,158 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 129 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 22,779 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது கொரோனா சிகிச்சையில் 1,98,865 பேர் உள்ளனர். 24 மணி நேரத்தில்  1 லட்சத்து 05 ஆயிரத்து 005  மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், பாதிப்பு விகிதம் 15.12  சதவீதமாக உள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மராட்டியத்தில் மேலும் 3,530 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் மேலும் 52 பேர் உயிரிழந்துள்ளனர். மராட்டியத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 65,04,147 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  1,38,221 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய பாதிப்பை ஒப்பிடும்போது இன்று தொற்று பாதிப்பு லேசாக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் நேற்று 2,740 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது

தொற்று பாதிப்புக்கு 27 பேர் உயிரிழந்து இருந்தனர்.  மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 49,671 ஆக உள்ளது.  கொரோனா மீட்பு விகிதம் 97.06- சதவிகிதமாகவும் உயிரிழப்பு விகிதம் 2.12 சதவிகிதமாகவும் உள்ளது.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment