சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவனை சுட்டுக்கொல்ல வேண்டும் -தெலுங்கானா அமைச்சர் ஆவேசம் || Tamil News, girl rape & murder, accused should be encountered

Byசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளி பல்லகொண்ட ராஜூ குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என ஐதராபாத் நகர காவல்துறை அறிவித்துள்ளது.

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 6 வயது சிறுமி, பக்கத்து வீட்டில் வசிக்கும் நபரால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலைமறைவான குற்றவாளி பல்லகொண்ட ராஜூவை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், பல்லகொண்ட ராஜூ குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என ஐதராபாத் நகர காவல்துறை அறிவித்துள்ளது. 

இதுபற்றி பேசிய தெலுங்கானா அமைச்சர் சாமகுரா மல்லா ரெட்டி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளியை சுட்டுக்கொல்ல வேண்டும் என ஆவேசமாக கூறினார்.

‘பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எங்கள் ஆறுதலை தெரிவிக்கிறோம். குற்றவாளியை நிச்சயம் பிடித்து என்கவுண்டர் செய்வோம். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பதுடன், தேவையான உதவியை செய்ய உள்ளோம்’ என அமைச்சர் தெரிவித்தார்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment