தலித் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்- முக்கிய குற்றவாளி கைது || Key Accused Arrested In Dalit Woman’s Gang-rape In UP’s Jewar

Byஉ.பி.யில் பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

நொய்டா:

உத்தர பிரதேச மாநிலம் கவுதமபுத்தா நகர் மாவட்டம் ஜேவார் கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 55 வயது பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். வயல்வெளிக்கு சென்ற அந்தப் பெண்ணிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உ.பி.யில் பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

இந்த பாலியல் வன்கொடுமை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். 4 குற்றவாளிகளில் திங்கட்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான மகேந்திரன் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர். 


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment