திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பவித்ரோற்சவ விழா 18-ந்தேதி தொடக்கம் || Tiruchanoor Sri Padmavathi Thayar Temple PAVITHRA UTSAVAM

Byதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 18-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை பவித்ரோற்சவ விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பவித்ரோற்சவ வி்ழா வருகிற 18-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. முன்னதாக 17-ந் தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது. பவித்ரோற்சவத்தின் முதல்நாளான 18-ந் தேதி பவித்ரா பிரதிஷ்டை நடக்கிறது.

19-ந் தேதி பவித்ரா சமர்ப்பணமும், 20-ந் தேதி மகா பூர்ணாஹூதியும் நடைபெறுகிறது. 20-ந் தேதி மாலை 3 மணி முதல் 5 மணி வரை கோவில் வளாகத்தில் ஸ்நபன திருமஞ்சனம் மற்றும் சக்கரஸ்ஞானம் நடைபெறும்.

கடைசி நாளில், மாலை 3 மணி முதல் 5 மணி வரை, கோவில் வளாகத்தில் ஸ்நபநத்திருமஞ்சனம் மற்றும் சக்கரஸ்நானம் நடைபெறும்.

இதனை முன்னிட்டு நேற்று கோவிலில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை கோவில் வளாகங்கள், சுவர், கூரை, பூஜை பொருட்கள் அனைத்தும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது.

தொடர்ந்து கோவில் முழுவதும் சூர்ணம், சுகந்த திரவிய பொருட்கள் கலந்த புனித தெளிக்கப்பட்டது. இதன் காரணமாக, கல்யாண உற்சவம் மற்றும் ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் கோவில் துணை அதிகாரி கஸ்துரிபாய், உதவி அதிகாரி பிரபாகரரெட்டி, அர்ச்சகர்கள் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment