திருப்பதியில் கடந்த 6 நாட்களில் ரூ.11.88 கோடி உண்டியல் வசூல் || Tamil News Rs 11.88 crore hundiyal collection in Tirupati

Byதிருப்பதியில் பிரம்மோற்சவ விழா தொடங்கிய 6 நாட்களில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 734 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 64 ஆயிரத்து 551 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா 6-வது நாளான நேற்று மாலை 4 மணிக்கு தங்க ரத உற்சவம் நடைபெறுவதாக இருந்தது.கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி பிரமோற்சவ விழா நடைபெற்று வருவதால் மாட வீதியில் தங்க ரத உற்சவம் ரத்து செய்யப்பட்டது.

தங்க ரத உற்சவத்திற்கு பதிலாக நேற்று சர்வ பூபால வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளினார். இரவு 7 மணி முதல் 9 மணி வரை கஜ வாகனத்தில் அருள்பாலித்தார்.

7-வது நாளான இன்று காலை சூரிய பிரபை வாகன சேவை நடந்தது. இரவு சந்திர பிரபை வாகன சேவை நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவில் தேவஸ்தான அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனர்.

கடந்த 7-ந்தேதி பிரம்மோற்சவ விழா தொடங்கியது. விழா தொடங்கி 6 நாட்களில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 734 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 64 ஆயிரத்து 551 பக்தர்கள் முடி காணிக்கைசெலுத்தினர். ரூ 11.88 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

நேற்று 27,176 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 11,107 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் 1.92 கோடி வசூலானது.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment