திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் அதானி குழுமம் வசம் வந்தது || Adani Group Takes Over Operations At Thiruvananthapuram International Airport

Byதிருவனந்தபுரம் விமான நிலைய தனியார்மயத்துக்கு எதிராக கடந்த ஆண்டு கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் இன்று முறைப்படி அதானி குழுமத்தின் வசம் வந்துள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி விமான நிலையத்தை இயக்கவும், நிர்வகிக்கவும் மற்றும் மேம்படுத்தும் பணிகளையும் அதானி நிறுவனம் மேற்கொள்ளும்.

விமான நிலையத்தில் இன்று நடைபெற்ற பொறுப்பேற்பு விழாவில், இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் அதானி குழுமத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விமான நிலையத்தை தனியார்மயமாக்கும் முடிவுக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. விமான நிலைய தனியார்மயத்துக்கு எதிராக கடந்த ஆண்டு கேரள சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், கேரள அரசின் ஆட்சேபனைகளை புறக்கணித்து விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விடுவதற்கான முடிவை மத்திய அரசு எடுத்தது குறிப்பிடத்தகக்து.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment