பெண்கள் மட்டுமே செயல்படும் ஓலா தொழிற்சாலை – 10000 பேருக்கு வேலை || Tamil News Women Only For Olas E Scooter Factory Which Is Worlds Largest

Byஓலா எலக்ட்ரிக் நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்-S1 அறிமுகம் மற்றும் விலையை கடந்த மாதம் அறிவித்தது.

ஓசூர்:

இந்நிலையில், பெண்களால் ஆன ஓலா தொழிற்சாலை என்ற புதிய அறிவிப்பை ஓலாவின் இணை நிறுவனர் பாவிஷ் அகர்வால் வெளியிட்டுள்ளார்.

அதில், ஓலாவின் ஃப்யூச்சர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை முழுவதுமாக பெண்களால் நடத்தப்படும். இங்கு 10,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வழங்கப்படும் என அறிவித்தார்.

இதுதொடர்பாக அகர்வால் வெளியிட்டுள்ள டுவிட்டரில், “தற்சார்பு இந்தியா திட்டமான ஆத்மநிர்பார் பாரத் திட்டத்திற்கு பெண்கள் தேவை. ஓலா ஃப்யூச்சர் தொழிற்சாலை, முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் என்பதை அறிவிப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். இந்த வாரத்தின் முதல் தொகுதியை நாங்கள் வரவேற்றோம். இது முழுவதும் பெண்களால் நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலையாக இருக்கும்” என பதிவிட்டுள்ளார்.

பெண்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை வழங்குவது அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment