பெண் குழந்தை பிறந்ததை விமரிசையாக கொண்டாடிய வியாபாரி || Tamil News Bhopal Panipuri Seller Celebrate daughter birth by giving free golgappas

Byபெண் குழந்தை பெற்ற அனைவருமே அதிர்ஷ்டசாலிகள் என போபாலை சேர்ந்த பானிபூரி வியாபாரி தெரிவித்துள்ளார்.

போபால்:

என்னதான் நாகரீக உலகத்திற்கு வந்துவிட்டாலும் பெண் குழந்தைகள் பிறப்பதை வெறுப்பது நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.

ஆனால் மத்திய பிரதேச மாநிலத்தில் பானிபூரி வியாபாரி ஒருவர், தனக்கு பெண் குழந்தை பிறந்ததை வெகு விமரிசையாக கொண்டாடி இருக்கிறார். போபாலை சேர்ந்த இந்த வியாபாரியின் பெயர் அஞ்சல் குப்தா (வயது 28).

இவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. மகள் பிறந்ததை கொண்டாடும் வகையில் அஞ்சல் குப்தா பானிபூரியை பொது மக்களுக்கு இலவசமாக வழங்கினார்.

சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பானிபூரிகளை  அவர் கொடுத்தார். பலரும் அதை வாங்கி சாப்பிட்டு வாழ்த்திவிட்டு சென்றனர்.

இதுதொடர்பாக அஞ்சல் குப்தா கூறும்போது, ‘‘பிறக்கும் குழந்தைகளில் ஆண், பெண் என்று பேதம் பார்க்கக்கூடாது. இதை அனைத்து மக்களும் கடைபிடிக்க வேண்டும். இதற்காகத்தான் நான் எனது மகள் பிறந்ததை கொண்டாடும் வகையில் பானிபூரியை இலவசமாக வழங்கினேன்.

பெண் குழந்தை பிறந்ததை அறிந்த சில உறவினர்கள், ‘‘உனக்கு பொருளாதார சுமை ஏற்படும்’’ என்று கூறினார்கள். அதை பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. பெண் குழந்தை பெற்ற அனைவருமே அதிர்ஷ்டசாலிகள்’’ என்று கூறினார்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment