மகாராஷ்டிராவில் மீண்டும் 8 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு || Tamil news maharashtra corona affected exceeding 8 thousand

Byமகாராஷ்டிராவில் இன்று ஒரேநாளில் 7,839 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மும்பை:

மகாராஷ்டிராவில்  கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும்  மெல்ல மெல்ல சரிந்து வருகிறது. 

அதன்படி, மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று மேலும் 8,159 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 62,37,755 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 165 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,30,918 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில்  இன்று ஒரேநாளில் 7,839 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60,08,750 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது வரை மாநிலத்தில் 94,745 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment