மத்திய அரசின் தவறான முடிவுகளால் 2-வது அலையில் 50 லட்சம் பேர் உயிரிழப்பு – ராகுல்காந்தி குற்றச்சாட்டு || Tamil news 50 lakh people killed in 2nd wave due to wrong decisions of central government says Rahul Gandhi

Byஇந்தியாவில் கொரோனாவால் இதுவரை 4.18 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக அரசின் அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன.

புதுடெல்லி: 

இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 4.18 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக அரசின் அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன. ஆனால் கொரோனா உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என ஆய்வு முடிவு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறது.

இந்த தகவலை சுட்டிக்காட்டி மத்திய அரசை ராகுல் காந்தி நேற்று கடுமையாக சாடியிருந்தார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘உண்மை. மத்திய அரசின் தவறான முடிவுகளால் கொரோனா 2-வது அலையில் நமது சகோதரிகள், சகோதரர்கள், தாய்மார்கள், தந்தைமார்கள் என 50 லட்சம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர்’ என்று குற்றம் சாட்டியிருந்தார். 

மேலும் கொரோனா உயிரிழப்புகள் குறித்த அந்த ஆய்வு முடிவையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment