மன்மோகன் சிங்கின் உடல்நிலை குறித்து விசாரித்த மத்திய சுகாதாரத்துறை மந்திரி || Health Minister Visits AIIMS To Enquire About Health Of Manmohan Singh

Byஇந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிகத் தீவிரமாக இருந்தபோது மன்மோகன் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார்.

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.

இந்நிலையில், மத்திய  சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று மன்மோகன் சிங்கிடம் நலம் விசாரித்தார். மேலும் அவரது உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து குறித்து கேட்டறிந்தார்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிகத் தீவிரமாக இருந்தபோது மன்மோகன் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். 


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment