மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்- பிரதமர் மோடி || PM Wishes “Speedy Recovery” For Manmohan Singh, In Hospital With Fever

Byமத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று மன்மோகன் சிங்கிடம் நலம் விசாரித்தார்.

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கிற்கு (வயது 89) நேற்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல் மற்றும் உடல் பலவீனம் அடைந்தது. உடனடியாக அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மன்மோகன் சிங் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.

முன்னதாக, மத்திய  சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று மன்மோகன் சிங்கிடம் நலம் விசாரித்தார். மேலும் அவரது உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து குறித்தும் கேட்டறிந்தார்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment