முன்னாள் ஜனாதிபதி ஜெயில் சிங்கின் பேரன் பாஜகவில் இணைந்தார் || Tamil News, Grandson of former President Giani Zail Singh, joins BJP

Byஇந்தர்ஜீத் சிங்கை வரவேற்று வாழ்த்திய மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி, பாஜக அடையாள அட்டையை வழங்கினார்.

புதுடெல்லி:

முன்னாள் ஜனாதிபதி கியானி ஜெயில் சங்கின் பேரன் இந்தர்ஜீத் சிங் இன்று பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி முன்னிலையில், அவர் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். அவரை கட்சியில் வரவேற்று வாழ்த்திய மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி, பாஜக அடையாள அட்டையை வழங்கினார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கியானி ஜெயில் சிங், 1982 முதல் 1987 வரை இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தார். இந்தியாவின் ஜனாதிபதியான முதல் சீக்கியரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment