மேற்குவங்கம்: 130 குழந்தைகள் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதி

By


மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் 130 குழந்தைகள் காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்குடன் ஜல்பைகுரி சர்தார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவரின் நிலை மேலும் மோசமானதால் நார்த் பெங்கால் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். யாருக்கும் அனுமதி மறுக்கப்படாத அளவு தேவையான கட்டமைப்பை ஏற்படுத்தி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். தேவைப்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைப்படிக்க: சென்னை: தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்ட 3அடி நீள அரியவகை மண்ணுளி பாம்பு 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

Leave a Comment