மோடி ஆட்சியில் வேலை இழப்பு- ராகுல்காந்தி குற்றச்சாட்டு || Tamil News Rahul Gandhi accusation Modi government job losses

Byவார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைக்கும், வேலை நாளான திங்கட்கிழமைக்கும் இடையிலான வித்தியாசத்தை முடிவுக்கு கொண்டு வந்ததுதான் மோடி ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சி என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

புதுடெல்லி:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், போர்டு நிறுவனம் இந்தியாவில் தனது வாகன உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது பற்றிய பத்திரிகை செய்தியை வெளியிட்டார். இந்த முடிவால் 4 ஆயிரம் சிறு நிறுவனங்கள் மூடப்படும் என்று தொழில்துறையினர் கூறியிருப்பது அச்செய்தியில் இடம்பெற்றுள்ளது.

அந்த பதிவில், ‘‘வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைக்கும், வேலை நாளான திங்கட்கிழமைக்கும் இடையிலான வித்தியாசத்தை முடிவுக்கு கொண்டு வந்ததுதான், மோடி ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சி. வேலையே இல்லாதபோது, அது ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் என்ன? திங்கட்கிழமையாக இருந்தால் என்ன?’’ என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment