ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் || Tamil News Aadhar linking with ration card extended upto Sept 30 Govt

Byஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கடந்தாண்டில் தமிழகத்துக்கு ரூ.6,317.64 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.3,993.80 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மக்களவையில் நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், ரேஷன் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது வரை 92.8% ரேசன் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கடந்தாண்டில் தமிழகத்துக்கு ரூ.6,317.64 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.3,993.80 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி தமிழகத்திற்கு ரூ.1,169.38 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.1,276.03 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்தார்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment