லகிம்பூர் சம்பவம்: தீர்ப்பு வருவதற்கு முன்னரே மொத்த பழியையும் பாஜக மீது சுமத்தக்கூடாது – நிர்மலா சீதாராமன் || Tamil news Nirmala Sitharaman says The entire blame should not be placed on the BJP before the verdict comes

Byலகிம்பூர் கேரி வன்முறையில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ள்ளார்.

வாஷிங்டன்:

அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் ஹார்வர்ட் கென்னடி பள்ளியில்  நடைபெற்ற உரையாடலின் போது லகிம்பூர் கேரி வன்முறை சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாரமன், விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் கண்டித்தக்கதுதான் என்றார். மேலும், அவர் கூறுகையில், “என் கேள்வி என்னவென்றால் இதுபோன்ற சம்பவங்கள் பல்வேறு மாநிலங்களில் நடக்கிறது. ஆனால் பாஜக ஆளும் மாநிலத்தில் நடந்தால் மட்டும் அது பெரிதுப்படுத்தப்படுகிறதே ஏன்? என்னுடைய கவலை இந்தியா முழுவதும் இப்படி நடக்கிறதே என்பது தான். என் அமைச்சரவை சகாக்களில் ஒருவருடைய மகன் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 

ஆனால் குற்றம் இன்னும் நிரூபணமாகவில்லை. நீதி விசாரணை முடிந்து தீர்ப்பு வரட்டும். அதற்கு முன்னரே மொத்த பழியையும் பாஜக மீது சுமத்தக் கூடாது. இதை நான் என்னுடைய பிரதமரையோ பாஜகவையோ காப்பாற்றும் நோக்கில் சொல்லவில்லை.

நான் இந்தியாவுக்காக பேசுவேன். நான் ஏழைகளுக்கான நீதி பற்றி நான் பேசுவேன். நான் அதை ஏளனம் செய்ய மாட்டேன். அப்படி ஏளனம் செய்யப்பட்டால், மன்னித்து விடுங்கள் உண்மைகளை பேசுவோம் என சொல்லியிருப்பேன். உங்களின் கேள்விக்கு என்னுடைய பதில் இதுதான்” என்றார். 


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment