வந்தே பாரத் திட்டத்தில் நாடு திரும்பியவர்கள் எத்தனை பேர்? மத்திய அரசு பதில் || Tamil News, 60.92 lakh Indians return under Vande Bharat Mission

Byவெளிநாடுகளில் இருந்து நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் இந்திய மக்கள், வந்தே பாரத் என்ற திட்டத்தின்கீழ் அழைத்து வரப்படுகின்றனர்.

புதுடெல்லி:


இந்திய மக்கள் உலகின் பல நாடுகளிலும் தொழில் மற்றும் வணிகம், கல்வி சார்ந்த காரணங்களுக்காக வசித்துவருகிறார்கள்.
கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நாடுகளுக்கான விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. எனவே, நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் இந்திய மக்களை அழைத்து வருவதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டது.
இதற்காக வந்தே பாரத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில் மாநிலங்களவையில் இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு, ஏப்ரல் 30ம் தேதி நிலவரப்படி, வந்தே பாரத் திட்டம் மூலம் 60,92,264 பேர் நாடு திரும்பியதாக தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் வெளிநாடுகளிலேயே 3570 இந்தியர்கள் பலியானதாகவும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment