வர்தா ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கிய 11 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

By


மகாராஷ்டிராவின் (Maharashtra) வார்தா ஆற்றில் (Wardha river) இன்று (செவ்வாய்க்கிழமை) திடீரென 30 பேருடன் சென்ற படகு கவிழ்ந்ததில், குறைந்தது 11 பேர் நீரில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது என போலீசார் தகவல் தெரிவித்தனர். பெனோடா ஷாஹீத் காவல் நிலையத்தின் எல்லைக்குள் வரும் ஸ்ரீக்ஷேத்ரா ஜுன்ஜ் அருகே ஆற்றின் குறுக்கே படகு சென்று கொண்டிருந்த போது காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கிராம மக்கள் காப்பாற்றினார்கள்:
படகு கவிழ்ந்ததை அடுத்து உதவிக்காக அழுகை சத்தம் கேட்டு, அருகில் இருந்த கிராம மக்கள் ஆற்றில் குதித்து பலரை காப்பாற்றி உள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நண்பகல் வரை, மூன்று உடல்கள் மீட்கப்பட்டன, எட்டு பேர் இன்னும் காணவில்லை. அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. படகில் சென்றவர்களில் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் நடந்து நான்கு மணி நேரம் ஆகிவிட்டதால், சிலர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காணாமல் போனவர்களை தேடும் பணியில், டைவர்ஸ் மற்றும் கிராமவாசிகள் குழுக்களுடன் இணைந்து போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட உள்ளூர் எம்எல்ஏ தேவேந்திர புயார் (MLA Devendra Bhuyar) சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.

ஆறுகள் நிரம்பி வழிகின்றன:
வார்தா, அமராவதி (Amravati), சந்திரபூர் மற்றும் கட்சிரோலி மாவட்டங்களில் பெய்த கனமழைக் காரணமாக வார்தா ஆற்றில் (Wardha river) கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். விபத்திற்கான சரியான காரணம் தெளிவாக இல்லை என்றாலும், ஆற்றின் கொள்ளளவை தாண்டி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அவர்கள் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றும், ஆற்றின் வலுவான நீரோட்டம் இருப்பதால், நீரில் மூழ்கியவர்கள் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்றும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

அசாமிலும் விபத்து:
செப்டம்பர் 8 அன்று அசாமின் ஜோர்ஹாட்டில் ஒரு பெரிய விபத்து நடந்தது. இங்கு பிரம்மபுத்திரா ஆற்றில் இரண்டு படகுகள் மோதினக்கொண்டன. இதில் ஒரு படகு மூழ்கியது. படகில் இருந்த 42 பேர் நீச்சல் அடித்து தங்கள் காப்பாற்றிக் கொண்டனர். இந்த விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார்.

இரண்டு படகுகளும் வெவ்வேறு திசைகளில் இருந்து வந்தாதகவந்ததா உள்ளூர் மக்கள் கூறினர். ஒரு படகு ஜோர்ஹாட்டில் உள்ள நிம்டிகாட்டில் இருந்து மஜூலிக்கு வந்து கொண்டிருந்தது, மற்றொன்று மஜூலியில் இருந்து ஜோர்ஹாட்டிற்கு சென்று கொண்டிருந்தது. படகு மஜூலி காட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் இருக்கும் போது விபத்து ஏற்பட்டது. இந்த படகுகளில் சுமார் 25 முதல் 30 பைக்குகளும் வைக்கப்பட்டிருந்தன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Leave a Comment