வாஷிங் மெஷினில் படமெடுத்து ஆடிய நல்லபாம்பு || Tamil News snake in washing machine

Byவாஷிங் மெஷினில் பாம்பு படம் எடுத்து ஆடிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகின்றன.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், மும்மிடிவரம் மண்டலம், மகிபால் செருவு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். இவர் தனது வீட்டில் உள்ள வாஷிங்மெஷினில் துணிகளை துவைப்பதற்காக வாஷிங்மெஷினை திறந்தார்.

அப்போது வாஷிங் மெஷினில் பதுங்கியிருந்த நல்லபாம்பு திடீரென படமெடுத்து ஆடியது. இதனைக் கண்ட ஸ்ரீநிவாஸ் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். வாஷிங்மெஷினில் பாம்பு இருக்கும் தகவலறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கூடி வேடிக்கை பார்த்தனர்.

ஒரு சிலர் தங்களது செல்போனில் பாம்பு படம் எடுத்து ஆடுவதை பதிவு செய்தனர். இதையடுத்து இதே பகுதியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் வர்மா என்பவரை அழைத்து வந்து பாம்பை பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.

வாஷிங் மெஷினில் பாம்பு படம் எடுத்து ஆடிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகின்றன.

மற்றொரு சம்பவம்…

இதேபோல் நேற்று காலை திருப்பதி அடுத்த பாபவிநாசம் வேணுகோபாலசாமி கோவில் அருகே உள்ள ஓட்டலில் வேலை செய்யும் பணியாளர்கள் ஒரு அறையில் தங்கி உள்ளனர்.

அந்த அறையில் இருந்த பீரோவில் உஸ் உஸ் என சத்தம் வந்தது. பீரோவை திறந்து பார்த்தபோது அதில் நல்ல பாம்பு படமெடுத்து ஆடியதை கண்ட ஊழியர்கள் அறையைவிட்டு அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான பாம்பு பிடிக்கும் பாஸ்கர் நாயுடுவுக்கு தகவல் தெரிவித்தனர் அவர் சம்பவ இடத்திற்கு வந்து பீரோவில் இருந்த நல்ல பாம்பை பிடித்து சென்று சேஷாசலம் வனப்பகுதியில் விட்டார்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment