36 ஆண்டுகளாக மரங்கள் நட்டு பராமரிக்கும் ஆசிரியர் || Tamil News Retired teacher plants more trees over 36 years

Byஇயற்கையை பாதுகாப்பதில் அதிக ஆர்வம் கொண்ட ரமா மாஸ்திரி தனது சொந்த கிராமத்தை இணைக்கும் 3 சாலைகளில் மரங்களை நட்டு 36 ஆண்டுகளாக பராமரித்து வருகிறார்.

புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம் பர்கார் மாவட்டம், கங்கான் கிராமத்தை சேர்ந்தவர் ரமா மாஸ்திரி (வயது 77). ஓய்வு பெற்ற ஆசிரியர்.

இயற்கையை பாதுகாப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் தனது சொந்த கிராமத்தை இணைக்கும் 3 சாலைகளில் மரங்களை நட்டு பராமரித்து வருகிறார். இந்த பணிகளை அவர் 36 ஆண்டுகளாக செய்து வருகிறார்.

3 சாலைகளும் இப்போது சோலைகளாக காட்சி அளிக்கின்றன. தொடர்ந்து புதிது புதிதாக மரங்களை அவர் நட்டு வருகிறார். தற்போது இந்த மரங்களை பராமரிப்பதையே தனது முழு நேர பணியாக கொண்டுள்ளார்.

தினமும் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கிறார். இதற்காக பல்வேறு இடங்களில் தண்ணீர் தொட்டிகளை அமைத்து இருக்கிறார். அருகில் இருக்கும் குட்டைகளில் இருந்து சைக்கிள் மூலம் தண்ணீரை எடுத்து வந்து தொட்டிகளில் நிரப்புகிறார். பின்னர் ஒவ்வொரு மரத்துக்கும், செடிக்கும் தண்ணீர் ஊற்றுகிறார்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment