75 கோடி தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனை- உலக சுகாதார நிறுவனம் இந்தியாவுக்கு பாராட்டு || Tamil News WHo Praise to India

Byகொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் நடைமுறைக்கு வந்த பிறகு அதை செலுத்திக்கொள்வதில் மக்கள் பெரிதளவில் ஆர்வம் காட்டவில்லை.

புதுடெல்லி:

கொரோனா தொற்றில் இருந்து உயிரைக் காக்கும் கவசமாக இருக்கும் கொரோனா தடுப்பூசிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் போடப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்கள் மத்தியில் தயக்கம் இருந்து வந்தது.

ஆனால் மருத்துவர்கள், நிபுணர்கள், ஆய்வகங்களில் கூறியதை அடுத்து நம்பிக்கை ஏற்பட்டு மக்கள் தற்போது தடுப்பூசிகளை ஆர்வமாக போட்டுக்கொள்கின்றனர். இதன் மூலம் இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 75 கோடியை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார மையத்தின் இயக்குனர் டாக்டர் பூனம் கேட்ரபால் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் நடைமுறைக்கு வந்த பிறகு அதை செலுத்திக் கொள்வதில் மக்கள் பெரிதளவில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் நாடு முழுவதும் 10 கோடி டோஸ் போடுவதற்கே 85 நாட்கள் ஆகி இருக்கிறது.

இந்தநிலை தற்போது மாறி 13 நாட்களில் 10 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு இந்தியா புதிய சாதனை படைத்துளளது. இதன் மூலம் 65 கோடியாக இருந்த எண்ணிக்கை தற்போது 75 கோடியை தாண்டி டோஸ் செலுத்தப்பட்டு இருப்பது பாராட்டுக்குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மனுஷ்க் மந்தவியா கூறுகையில், ‘‘பிரதமர் நரேந்திர மோடியின் உதவியுடன் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாளுக்கு நாள் தொடர்ந்து புதிய பரிமாணங்களை அடைந்து வருகிறது.

கடந்த ஆகஸ்டு மாதம் 27-ந் தேதி அன்று மட்டும் ஒரே நாளில் ஒரு கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டது. இது ஒரு முக்கியமான சாதனை ஆகும்.

இதேபோல் கடந்த 6-ந் தேதி அன்று போடப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல் தாண்டியது. அடுத்த 11 நாட்களில் இதன் எண்ணிக்கை 3 மடங்காக உயர்ந்து இருப்பது பாராட்டுக்குரியது’’ என்று கூறினார்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment