அலிபாபா-வை பந்தாடும் அரசு.. சீனாவின் அடுத்த அதிரடி..!

By


சீன அரசு

சீன அரசு டெக் நிறுவனங்கள் மீதான நடவடிக்கையைத் துவங்கியதற்கு முதலும் முக்கியக் காரணமாக விளங்கியது அலிபாபா குழுமத்தின் நிறுவனர் ஜாக் மா சீனா நிதியியல் அமைப்பைக் கூறியது தான் என்றால் மிகையில்லை.

ஜாக் மா

ஜாக் மா

சீன அரசுக்கு எதிரான ஜாக் மா-வின் பேச்சுக்குப் பின்பு சீன அறசு அலிபே நிறுவனத்தின் 35 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐபிஓ-விற்குத் தடையைப் போட்டது. இதன் பின்பு தொடர்ந்து அரசு கட்டுப்பாட்டிற்குள்ளே அலிபே வைக்கப்பட்டு இருந்தது.

நவம்பர் மாதம் முதல்

நவம்பர் மாதம் முதல்

நவம்பர் மாதத்திற்குப் பின்பு சீன அரசு எவ்விதமான கருணையும் இல்லாமல் அனைத்து டெக் சேவை நிறுவனங்கள் மீதும் கடுமையான நடவடிக்கையை எடுத்து மொத்த டேட்டா சேகரிப்பு விதிமுறையை மாற்றி அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

சீன டெக் நிறுவனங்கள்

சீன டெக் நிறுவனங்கள்

கடந்த 10 மாத காலகட்டத்தில் சீனாவின் அனைத்து டெக் நிறுவனங்களின் மதிப்பும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் இனி யாரும் எந்தத் துறையிலும் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

 அலிபாபா

அலிபாபா

அனைத்தையும் முடிந்த பின்பு சீன அரசு தற்போது ஆரம்பித்த இடத்திற்கே வந்துள்ளது, ஆம் சீன அரசு தற்போது அலிபாபா குழுமத்தின் டிஜிட்டல் நிதியியல் சேவை பிரிவான அலிபே நிறுவனத்தை இரண்டாக உடைத்து அரசு நிறுவனங்கள் முதலீடு செய்வது மூலம் அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

அலிபே நிறுவனம்

அலிபே நிறுவனம்

அலிபே நிறுவனத்தைச் சீன அரசு கட்டம் கட்டி தூக்கும் அளவிற்கு அவ்வளவு பெரிய நிறுவனமா என்றால் அதற்குப் பதில் ஆம் என்பது தான். அலிபே பேமெண்ட் மற்றும் டிஜிட்டல் நிதியியல் தளம் சீனா, இந்தியா உட்படப் பல ஆசிய நாடுகளில் இயங்கி வருகிறது. இதன் மூலம் அலிபே தளத்தில் சுமார் 100 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தரவுகளை வைத்துள்ளது.

அலிபே தளத்தின் கடன் சேவை

அலிபே தளத்தின் கடன் சேவை

இந்த அலிபே தளம் தற்போது சீனாவில் தனது வாடிக்கையாளர்கள் தரவுகளை மொத்தத்தையும் வைத்துக்குக் கொண்டு யாருக்கு எப்படி, எப்போது, எவ்வளவு கடன் அளிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும். டிஜிட்டல் கடன் பிரிவில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் இந்த நிறுவனத்தின் கடன் சேவை வர்த்தகத்தைத் தனியாகப் பிரிக்கச் சீன அரசு முடிவு செய்துள்ளது.

credit scoring கூட்டணி நிறுவனம்

credit scoring கூட்டணி நிறுவனம்

மேலும் மக்களின் டேட்டா-வை சேமிக்கும் நிறுவனம் மற்றும் கடன் சேவை நிறுவனமும் இணைக்கப்பட்ட credit scoring கூட்டணி நிறுவனம் உருவாக்கப்பட உள்ளது. இந்தக் கூட்டணி நிறுவனத்தின் சீன அரசு நிறுவனங்கள் அதிகளவிலான தொகையை முதலீடு செய்து பெரும் பகுதி பங்குகளைக் கைப்பற்றத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 அரசு நிறுவனங்கள் முதலீடு

அரசு நிறுவனங்கள் முதலீடு

இந்தக் கட்டமைப்பு மூலம் அலிபே நிறுவனம் மொத்தத்தையும் சீன அரசு கட்டுப்பாட்டில் இருக்கும், மேலும் புதிதாக உருவாக்கப்பட்டும் கூட்டணி நிறுவனத்தில் ஆன்ட் பைனான்சியல் மற்றும் Zhejiang Tourism Investment Group தலா 35 சதவீத பங்குகளும், Hangzhou Finance, Investment Group, Zhejiang Electronic Port, ஆகிய மூன்றும் தலா 5 சதவீத பங்குகளைக் கைப்பற்ற உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இங்குக் குறிப்பிடப்பட்டு உள்ள அனைத்து நிறுவனங்களும் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்கள்.

சீன அரசு

சீன அரசு

இதன் மூலம் அலிபே நிறுவனத்தையும் சீன அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது, இதேபோல் அலிபே தரவுகள் அனைத்தும் தற்போது சீன அரசிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.Source link

Leave a Comment