இந்தியாவின் முதல் கிரீன் ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை.. அசத்தும் அரசு நிறுவனம்..!

By


பசுமை ஹைட்ரஜன்

பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை மூலம் இந்தியன் ஆயில் நிறுவனம் நாட்டின் பெட்ரோல், டீசல் எரிபொருள் மட்டும் அல்லாமல் எதிர்கால எனர்ஜி சந்தைக்குத் தேவையான பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளது.

 இந்தியன் ஆயில் நிறுவனம்

இந்தியன் ஆயில் நிறுவனம்

இந்தியன் ஆயில் நிறுவனம் தனது வர்த்தகம் மற்றும் வருமானத்தைக் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரீடைல் எரிபொருள் விற்பனை மூலமாகவே இருந்தாலும், அடுத்த 10 வருடத்தில் இந்தியாவில் ஹைட்ரஜன் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்கும் நிலையில், இதற்குத் தயாராகியுள்ளது.

 சோலார் மின்சாரத் தளம்

சோலார் மின்சாரத் தளம்

இதேபோல் இனி கட்டமைக்கும் அனைத்துச் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளில் பவர் பிளான்ட் வைக்காமல் 250 மெகாவாட் சோலார் மின்சாரத் தளத்தை நிறுவன திட்டமிட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஸ்ரீகாந்த் மாதவ் தெரிவித்துள்ளார்.

 electrolysis தொழிற்சாலை

electrolysis தொழிற்சாலை

ராஜஸ்தானில் இந்தியன் ஆயில் காற்றாலை மின்சார உற்பத்தி தளத்தை வைத்துள்ளது, இந்தத் தளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைத் தற்போது புதிதாக அமைக்கப்பட்ட ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் electrolysis தொழிற்சாலைக்கு இணைக்கத் திட்டமிட்டு உள்ளது இந்தியன் ஆயில்.Source link

Leave a Comment