உலகமே தமிழகத்தை உற்றுநோக்க வைத்த ஓலா.. 2 நொடிக்கு 1 வாகனம் உற்பத்தி திட்டம்.. இது வேற லெவல்..!

By


வாகன சந்தையில் மாபெரும் புரட்சி

வெறும் 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சம் வாகனங்களுக்கு முன் பதிவு செய்யப்பட்டதாக ஓலா அறிவித்தது. இதுவே மக்கள் மத்தியில் எந்தளவுக்கு மின்சார வாகனங்களுக்கு இடமுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதோடு உலகின் இரண்டாவது மிகப்பெரிய வாகன சந்தையான இந்தியாவில், ஓலாவின் இந்த பிரம்மாண்ட திட்டம், ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓசூரில் பிரம்மாண்ட ஆலை

ஓசூரில் பிரம்மாண்ட ஆலை

இந்த உற்பத்திக்காக ஓலா நிறுவனம் ஓசூரில் அமைத்து வரும் பிரம்மாண்ட ஆலையானது ஓரளவு கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்ட உற்பத்தியானது இன்னும் சில மாதங்களில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதுமே மின்சார வாகனங்களுகாக தேவை அதிகரித்து வரும் இந்த நிலையில், ஓலாவின் இந்த பிரம்மாண்ட ஆலை, உலகமே தமிழகத்தினை திரும்பி பார்க்க வைத்துள்ளது எனலாம்.

ஓலாவின் அதிரடி திட்டம்

ஓலாவின் அதிரடி திட்டம்

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்த பிரம்மாண்ட ஆலையானது, வரும் காலத்தில் மிகப்பெரிய ஆலையாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டெஸ்லா போன்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படவிருக்கும் வாகனங்கள் இந்தியா மட்டும் அல்ல, ஐரோப்பா, ஆசியா, லத்தீன் உள்ளிட்ட பல சந்தைகளுக்கும் சப்ளை செய்யப்படும் என ஏற்கனவே ஓலா கூறியிருந்தது.

10 மில்லியன் யூனிட் திறன்

10 மில்லியன் யூனிட் திறன்

இந்த ஆலையானது 500 ஏக்கர் பரப்பளவில் அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது 378 கால்பந்து மைதானங்கள் அளவு இருக்கலாம். இந்த பணிகள் முழுமையாக 2022ம் ஆண்டில் நிறைவடையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரம்மாண்ட ஆலையில் ஆண்டுக்கு 10 மில்லியன் யூனிட்கள் உற்பத்தி செய்யும் அளவுக்கு திறனைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

உற்பத்திக்கு ரோபோக்களும் பயன்படுத்த திட்டம்

உற்பத்திக்கு ரோபோக்களும் பயன்படுத்த திட்டம்

உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிலையமாக உருவெடுக்கும். கிட்டதட்ட 10,000 பணியாளர்கள், 3000 ரோபோக்களை கொண்டிருக்கும். தற்போது முன்னிலையில் இருக்கும் இரு சக்கர வாகன நிறுவனம் ஹீரோ மோட்டோகார்ப் தான். இது தற்போது 9.8 மில்லியன் யூனிட்களை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது.

A – Z ஆலையாக இருக்கும்

A – Z ஆலையாக இருக்கும்

மொத்தம் பணிகள் 2022ம் ஆண்டிற்குள் நிறைவடையலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த ஆலை ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு மெகா ஆலையாக உருவெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒருங்கிணைந்த ஆலையில் உற்பத்தி வசதி, பேட்டரி, பெயிண்ட் கடை, வெல்டிங், மோட்டார், முடிக்கப்பட்ட பொருட்கள், அசெம்பிள் என அனைத்து செயல்பாடுகளும் இருக்கும்.

சோலார் சிஸ்டமும் உண்டு

சோலார் சிஸ்டமும் உண்டு

பல ஸ்மார்ட் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு வரும் இந்த ஆலையில், 3,000 ரோபோக்களை பயன்படுத்தும் என்றும் முன்னரே அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த அழகிய பிரம்மாண்ட தொழிற்சாலையை சுற்றி 100 ஏக்கர் வனப்பகுதியும், தொழிற்சாலைக்குள் இரண்டு ஏக்கர் வனப்பகுதில் சோலார் மற்றும் ரீனிவபிள் எனர்ஜி உள்ளிட்ட நடவடிக்கையும் இருக்கும் என ஓலா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

2 நொடிக்கு ஒரு வாகனம் உற்பத்தி

2 நொடிக்கு ஒரு வாகனம் உற்பத்தி

இப்படி பிரம்மாண்ட முறையில் உருவாகி வரும் இந்த ஆலையில் முழு உற்பத்தி திறனையும் பயன்படுத்தினால் ஒவ்வொரு 2 நொடிகளுக்கும் ஒரு வாகனம் உற்பத்தி செய்யப்படலாம் என ஓலா மதிப்பீடு நினைவு கூறத்தக்கது. உண்மையில் பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டு வரும் இந்த வாகனங்கள், வரும் காலத்தில் பெரியளவில் வரவேற்பை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாதனை படைத்த முன்பதிவு

சாதனை படைத்த முன்பதிவு

இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாகன சரித்திரத்தில் ஒரு சாதனையை படைக்கலாம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமே, 24 மணி நேரத்தில் 1 லட்சம் முன் பதிவுகள் தான்.Source link

Leave a Comment