ஐடி ஃபிரஷ்ஷர்களுக்கு நல்ல வாய்ப்பு.. ஹெச்சிஎல்லின் சூப்பர் அறிவிப்பு..!

By


நேர்மறையான வளர்ச்சி விகிதம்

ஹெச்சிஎல்லின் இந்த வருவாய் விகிதமானது, மற்ற போட்டி நிறுவனங்களை காட்டிலும் குறைவாகவே உள்ளது. எனினும் கடந்த ஆண்டு கொரோனாவின் உச்சகாலத்தில் இருந்த வளர்ச்சி விகிதத்தினை காட்டிலும் நேர்மறையான வளர்ச்சியினைக் கண்டுள்ளது. ஆக முதல் காலாண்டில் ஹெச்சிஎல்லின் வளர்ச்சி விகிதமானது, கடந்த ஆண்டை காட்டிலும் பரவாயில்லை எனலாம்.

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வருவாய் விகிதமானது ஒரளவுக்கு வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ள இந்த நிலையில், ஹெச்சிஎல் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் 20,000 – 22,000 ஃபிரஷ்ஷர்களை பணியில் அமர்த்தும் என தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் அதிகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என அதன் தலைமை மனிதவள அதிகாரி விவி அப்பாராவ் கூறியுள்ளார்.

ஊழியர்களுக்கு தடுப்பூசி நிலவரம்

ஊழியர்களுக்கு தடுப்பூசி நிலவரம்

கடந்த ஆண்டில் ஹெச்சிஎல் நிறுவனம் சர்வேதேச அளவில் 14,600 ஃபிரஷ்ஷர்களை பணியில் அமர்த்தியது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஹெச்சிஎல் ஊழியர்களில் 70% கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மேலும் அனைவரும் செப்டம்பர் இறுதிக்குள் இரண்டு ஊசிகளுக்கும் போட்டுக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷிவ் நாடார் பதவி விலகல்

ஷிவ் நாடார் பதவி விலகல்

இதற்கிடையில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் நிறுவனரான 76 வயதான ஷிவ் நாடார் தனது சேர்மன் பதவியில் இருந்தும், நிர்வாக குழுவில் இருந்தும் விலகியுள்ளார். தற்போது நிர்வாகத்தின் மூலோபாய ஆலோசகர் மற்றும் சேர்மன் எமரிட்டஸ் பதவியினை ஏற்றுள்ளார். இதற்கிடையில் தற்போது தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சி. விஜயகுமாருக்கு, நிர்வாக தலைவர் பதவியும் அளிக்கப்பட்டுள்ளது.

இன்றைய பங்கு விலை

இன்றைய பங்கு விலை

கடந்த ஆண்டே தனது மகள் ரோஷினி நாடாரிடம் தலைவர் பதவியை ஒப்படைந்திருந்த நிலையில், தற்போது ஹெச்சிஎல் நிர்வாகம் முழுவதும் ரோஷினியை சேர்ந்துள்ளது.

இதற்கடையில் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் பங்கு விலையானது 2% குறைந்து 980 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.Source link

Leave a Comment