ஒரு மாத சரிவில் தங்கம் விலை.. தங்கம் வாங்கலாமா..? வேண்டாமா..?

By


தங்கம் விலை

இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயம் செய்வதில் மிக முக்கிய பங்கு வெளிநாட்டு சந்தைகளும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பும் உள்ளது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் அமெரிக்க சந்தையின் நுகர்வோர் விலை அளவீடு தரவுகள் தங்கம் முதலீட்டு சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளில் கொரோனா

உலக நாடுகளில் கொரோனா

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இன்னும் பல நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக பரவி வரும் வேளையில் பங்குச்சந்தை, முதல் பத்திர சந்தை வரையில் அதிகளவிலான மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. இதன் வாயிலாக கடந்த ஒரு வாரம் மட்டும் தங்கம் விலை சர்வதேச சந்தையில் சுமார் 2.1 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

சர்வதேச சந்தை விலை

சர்வதேச சந்தை விலை

இதன் மூலம் இன்றைய சர்வதேச சந்தை வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,793.14 டாலரில் இருந்து 1,787 டாலர் வரையில் சரிந்துள்ளது. இதேபோல் கடந்த 3 மாதத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,865.60 டாலரில் இருந்து 1,723 டாலர் வரையிலான சரிவை பதிவு செய்யதுள்ளது.

 MCX சந்தை தங்கம் விலை

MCX சந்தை தங்கம் விலை

இதேவேளையில் MCX சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை இன்று அதிகளவிலான தடுமாற்றத்தை சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தகம் துவங்கும் போது 0.50 சதவீதம் வரையில் உயர்ந்த தங்கம் விலை சரிவை சந்தித்து தற்போது 0.08 சதவீத உயர்வுடன் 46,842.00 ரூபாய் அளவீட்டை அடைந்துள்ளது.

MCX சந்தை வெள்ளி விலை

MCX சந்தை வெள்ளி விலை

இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை இன்று அதிகப்படியாக 1 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. தற்போது 0.61 சதவீதம் வரையில் சரிந்து 63,206.00 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதன் தாக்கம் ரீடைல் சந்தையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் MMTC சந்தையில் 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 4,831.99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 பங்குச்சந்தை, கச்சா எண்ணெய்

பங்குச்சந்தை, கச்சா எண்ணெய்

உலகின் முன்னணி நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் பங்குச்சந்தையில் இருந்து பெரும்பாலான முதலீடுகள் முடங்கியுள்ளது. கச்சா எண்ணெய் சந்தையில் ஆசிய சந்தை வளர்ச்சிக்காக OPEC கச்சா எண்ணெய் குறைத்துள்ளதால் இதன் மீதான முதலீடுகளும், குறைந்துள்ளது.

 பத்திர முதலீட்டு சந்தை

பத்திர முதலீட்டு சந்தை

பங்குச்சந்தை, கச்சா எண்ணெய் ஆகியவை சரிந்துக்கிடக்கும் நிலையில் பத்திர முதலீடுகள் மீதான லாபம் தங்க முதலீடுகளை காட்டிலும் அதிகமாக கிடைக்கும் காரணத்தால் பெருமளவிலான முதலீடுகள் பத்திர சந்தை நோக்கி செல்கிறது. இதன் மூலம் அமெரிக்க சந்தையில் 10 வருட பத்திர முதலீடு மீதான லாபம் அதிகரித்துள்ளது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ்

அமெரிக்க பெடரல் ரிசர்வ்

மேலும் அடுத்த மாதம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கை முடிவுகளை அறிவிக்க உள்ளது. அமெரிக்க சந்தையை ஏற்கனவே பணவீக்கம் மற்றும் முதலீட்டு சந்தைகள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் காரணத்தால், முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகறது.

தங்கத்திற்கான டிமாண்ட்

தங்கத்திற்கான டிமாண்ட்

தங்கத்திற்கான டிமாண்ட் அதிகளவில் குறைந்துள்ளது குறிப்பாக இந்தியாவில் மக்கள் அதிகளவிலான பழைய தங்கத்தை அடமானம் வைத்தும் விற்பனை செய்து வரும் காரணத்தால் புதிய தங்கத்தை வாங்குவோர் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது.

தங்கம்  விலை

தங்கம் விலை

இப்படி சுத்தி சுத்தி தங்கம் மற்றும் அதை சார்ந்தவை வலிமை இழக்கும் காரணத்தால் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் அடுத்த சில வாரங்களுக்கு தங்கம் விலை சரிவு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.Source link

Leave a Comment