Thursday, February 25, 2021
Home Money கலாரி கேப்பிடல் நிறுவனத்தில் முதலீடு செய்யும் ஜியோ..!

கலாரி கேப்பிடல் நிறுவனத்தில் முதலீடு செய்யும் ஜியோ..!


முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஜியோ பிளாட்பார்ம்ஸ், இந்தியாவின் முன்னணி வென்சர் கேப்பிடல் நிறுவனமான கலாரி கேப்பிடல் நிறுவனத்தில் சுமார் 200 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டெக் துறையில் தொடர்ந்து வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ, தற்போது திட்டமிட்டுள்ள 200 மில்லியன் டாலர் தொகையில் முதல் பகுதியாக 100 மில்லியன் டாலரையும், பின்னாளில் மற்றொரு 100 மில்லியன் டாலர் அளவிலான தொகையைக் கலாரி கேப்பிடல் நிறுவனத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

வாணி கோலா தலைமையிலான கலாரி கேப்பிடல் நிறுவனம் கடந்த 10 வருடத்தில் ஸ்னாப்டீல், அர்பன் லேடர், மைந்தரா, ட்ரீம் 11 போன்ற பல்வேறு ஸ்டார்ட்அப் மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனத்தில் செய்த முதலீட்டின் மூலம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் இந்திய வென்சர் கேப்பிடல் துறையில் கலாரி கேப்பிடல் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

இந்நிலையில் தற்போது கலாரி கேப்பிடல் மற்றும் ரிலையன்ஸ் கூட்டணி மூலம் இந்திய டெக் மற்றும் ஸ்டார்ட்அப் சந்தையில் இந்நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும்.

மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவில் மிகப்பெரிய டிஜிட்டல் வர்த்தகச் சேவை சந்தையை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ள நிலையில் பல புதிய வழிகளை ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

BSNL இன் அற்புதமான Prepaid plan, ஒரே ஒரு ரீசார்ஜில் Unlimited Data பெறலாம்!

புது டெல்லி: அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் சிறந்த சலுகைகளை கொண்டு வருகிறது. புதிய 398 ரூபாய் ரீசார்ஜ் திட்டம்...

சாமனியர்களுக்கு கிடைத்த ஜாக்பாட்.. 3-வது நாளாக தங்கம் விலை சரிவு.. இன்னும் குறையுமா?

<!----> இன்று என்னவெல்லாம் பார்க்கபோகிறோம்? இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? ஆபரணத் தங்கத்தின் விலை...

Recent Comments