குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் வேண்டுமா.. ஐசிஐசிஐ வங்கியின் ஆஃபர பாருங்க..!

By


பெட்ரோல், டீசல் விலை

கொரோனாவின் வருகைக்கு பிறகு பல அத்தியாவசிய பொருட்களின் விலையானது கிடுகிடு உச்சத்தினை தொட்டுள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலையானது வரலாறு காணாத அளவு உச்சத்தினை தொட்டுள்ளது. பல முக்கிய நகரங்களிலும் 100 ரூபாயினை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

கேஷ் பேக் சலுகை

கேஷ் பேக் சலுகை

இதற்கிடையில் தான் ஐசிஐசிஐ வங்கியும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து புதிய கிரெடிட் கார்டு திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளன. பெட்ரோல் விலையானது உச்சத்தில் இருந்து வரும் நிலையில், இந்த கிரெடிட் கார்டு மூலம் பெட்ரோல் வாங்கினால் 5% கேஷ் பேக் சலுகை கிடைக்கும் என அறிவித்துள்ளது.

பல இடங்களிலும் சலுகை

பல இடங்களிலும் சலுகை

இதுவே ஹெச்பி பே மூலமாக கட்டணம் செலுத்தினால் கூடுதலாக 1.5% சலுகை கிடைக்கும். இந்த கிரெடிட் கார்டில் இது மட்டும் அல்ல, இன்னும் பல சலுகைகளும் கிடைக்கும். குறிப்பாக மின்சாரம் மற்றும் மொபைல், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள், பிக் பஜார், ஈ-காமர்ஸ் போர்ட்டல்ஸ் உள்ளிட்ட பல இடங்களிலும் சலுகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது?

எப்படி விண்ணப்பிப்பது?

ஐசிஐசிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் வங்கியின் இணைய வங்கி தளம் அல்லது மொபைல் வங்கியின் பயன்பாடான ஐமொபைல் பே மூலம், ஐசிஐசிஐ வங்கி ஹெச்பிசிஎல் சூப்பர் சேவர் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் கார்டும் கிடைக்கும். இது தவிர பிசிகலாகவும் கார்டு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

எவ்வளவு கேஷ் பேக்

எவ்வளவு கேஷ் பேக்

ஏற்கனவே வைத்துள்ள ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டுகளை, ICICI Bank HPCL Super Saver Credit Card ஆகவும் மாற்றிக் கொள்ளலாம். இந்த கார்டின் மூலம் எரிபொருளுக்காக செலவழிக்கும்போது 5% கேஷ் பேக் கிடைக்கும். இதில் 4% கேஷ் பேக்கும், 1% கட்டணங்களும் தள்ளுபடி செய்யப்படும்.

வேறு என்ன சலுகையெல்லாம் உண்டு

வேறு என்ன சலுகையெல்லாம் உண்டு

இது தவிர மின்சார கட்டனம், மொபைல் கட்டணம் உள்ளிட்ட செலவினங்களுக்காக இந்த கார்டினை பயன்படுத்தும்போதும், பிக் பஜார் மற்றும் மற்றும் டிமார்ட் உள்ளிட்ட பெரும் கடைகளில் ஷாப்பிங் செய்யும்போதும் 5% ரிவார்டு பாயிண்ட்களும் கிடைக்கும். இது தவிர இந்த கார்டில் இன்னும் பல சலுகைகளும் உள்ளன.Source link

Leave a Comment