அரசுக்கு வருவாய் இழப்பு
குறிப்பாக பல லட்சம் பேர் தங்களது வேலையினையும் இழந்து தவித்தனர். இதன் காரணமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய்கள் வெகுவாக சரிந்தன.
இது ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியினையும் முடக்கி போட்டது. ஒரு புறம் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் சரிந்தது. ஆனால் அதே நேரம் செலவுகள் அதிகரித்தன. குறிப்பாக மாநில அரசுகளுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாயில் துண்டு விழுந்தது.

வருவாய் பற்றாக்குறை
எனினும் இதற்கிடையிலும் அரசு செலவினங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இதன் காரணமாக நிதி பற்றாக்குறை என்பது அதிகரித்தது. இந்த நிலையில் அரசு கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. குறிப்பாக மாநில அரசுகளை கடன் வாங்கிக் கொள்ள மத்திய அரசு அனுமதித்தது. இந்த நிலையில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை 41,417.30 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

வரி வருவாய் சரிவு
இப்படியொரு இக்கட்டான நிலையில் தான் அடுத்து வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டினை நிதியமைச்சர் ஒ பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறது.
குறிப்பாக தமிழக வரிவருவாய் 17.64% குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழக அரசின் வரி வருவாய் 1,33,530 கோடி ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் தமிழக அரசின் செலவு 2,46,694 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கடன் வாங்க திட்டம்
இதுமட்டும் அல்ல, கொரோனா காரணமாக பல்வேறு துறைகளில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக போக்குவரத்து கழக்கத்திற்கு 3,717.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.
இப்படி ஒரு நெருக்கடியான நிலையில் தான் அரசு 2021 – 22ம் நிதியாண்டில் அரசு 84,686.85 கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில் தமிழத்துக்கான பல்வேறு நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. நிலுவையில் உள்ள நிதிகளை உடனே வழங்க வேண்டும் என்றும் தனது பட்ஜெட் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.